தொண்டரை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்

நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமது கட்சித் தொண்டரை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்படத் தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு நேரில் முன்னிலையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, அங்கே ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரண்ட தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் கடுப்பாகிப் போன விஜய காந்த், நாக்கைத் துருத்தி, கையை ஓங்கியபடி கட்சி நிர்வாகியை அடிக்கப் பாய்ந்தார். அருகில் இருந்த கட்சியின் முக்கிய தலை வர்களால் விஜயகாந்தின் அடியில் இருந்து தொண்டர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரை அடிக்கப்போனார் விஜய காந்த். டெல்லியில் ஜெயா டிவி செய்தியாளரை நோக்கி 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ' என எகிறினார். சென்னையில் நிதானமே இல்லாமல் பத்திரிகை யாளர்களைப் பார்த்து 'த்தூ' எனக் காறி உமிழ்ந்தார். தற்போது தஞ்சாவூரில் கையை ஓங்கி பெயரை மேலும் கெடுத்துக் கொண்டுள்ளார் விஜயகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!