பள்ளித் துப்புரவுப் பணியில் மாணவர்கள்

இவ்­வாண்டு இறு­திக்­குள் தொடக்­கப் பள்­ளி­யி­லி­ருந்து தொடக்கக் கல்­லூ­ரி ­வரை பயிலும் அனைத்து மாண­வர்­களும் தங்கள் பள்ளியின் சுற்றுப்­ பு­றத்­ துப்­பு­ர­வுப் பணியில் அன்றாடம் ஈடு­படுத்­தப்­படு­வர். மாண­வர்­களிடையே பராமரிப்பு, பொறுப்­பு­ணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்­வி­யமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­வித்­தது. துப்­பு­ர­வுப் பணி பள்­ளி­யில் முதல் பாடம் தொங்கும் முன் னரோ, இடை­வேளை­யின் போதோ, பாடங்களுக்கு நடுவி லேயோ அல்லது பள்ளி முடியும் தறு­வா­யிலோ மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று அமைச்சு கூறியது. மாண­வர்­கள் சுத்தம் செய்ய வேண்டிய பகு­தி­க­ளாக பொது இடங்கள், உண­வ­கங்கள், நடைக்­கூ­டம் ஆகியவை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

ஸிங்னான் தொடக்­கப்­ பள்ளி, பார்க்­வியூ தொடக்­க­ப் பள்ளி, நியூடௌன் உயர்­நிலைப் பள்ளி ஆகியவை ஏற்கெனவே மாண­வர்­களை ஐந்து முதல் பத்து நிமி­டங்கள்­ வரை பள்­ளி­களில் துப்­பு­ர­வுப் பணி­களில் ஈடு­ப­டுத்தும் நடை­முறையைக் கொண்டு வந்­துள்­ளன. ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள ஸிங்னான் தொடக்­கப்­பள்­ளி­யில் இடை­வேளையின்­போ­தும் பள்ளி முடிந்து வீடு செல்­லு­முன்­ன­ரும் மாண­வர்­கள் துப்­பு­ர­வுப் பணியில் ஈடு­படு­கின்றனர். அத்­து­டன், குடும்பத்­தா­ரின் வீட்டுப் பணிகளில் எவ்வாறு உதவுகின்ற­னர் என்பதைப் பட்­டி­ய­லி­டும் வேலையும் தொடக்­க­ நிலை ஒன்று மாண­வர்­களுக்குத் தரப்­பட்டுள்ளது. பார்க்­வியூ தொடக்கப் ­பள்­ளி­யில் மாண­வர்­கள் பள்ளி நேரம் முடிந்த­தும் ஐந்து நிமிடங் களுக்கு தங்கள் பள்ளி அறை களை துப்­பு­ரவு செய்கிறார்கள். ஸிங்னான் தொடக்­கப் பள்ளிக்கு நேற்று வருகையளித்த தற்­கா­லிக கல்வி அமைச்­சர் (பள்­ளி­கள்) இங் சீ மெங், அங்கு நல்ல சுகா­தா­ரப் பழக்க வழக்­கங்களை கற்­றுத்­த­ரும் பாடத்தைப் பார்வை­யிட்டார்.

பள்ளியைச் சுத்தம் செய்யும் ஸிங்னான் தொடக்­கப் பள்­ளி மாணவர்களுடன் உரையாடும் தற்­கா­லிக கல்வி அமைச்­சர் (பள்­ளி­கள்) இங் சீ மெங். படம்: தி நியூ பேப்பர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!