ஃபிஜி: சூறாவளி தாக்கம்: வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

சிட்னி: சென்ற வார இறுதியில் ஃபிஜியில் வீசிய கடும் சூறாவளியின்போது பல வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்ததால் ஆயிரக்கணக்காக மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. சூறாவளிக் காற்றில் வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம் களில் தங்கியுள்ளனர். சுமார் 35,000 பேர் தற்காலிக முகாம் களில் தங்கியுள்ளதாக பேரிடர் நிவராண அமைப்பு தெரிவித் துள்ளது. ஒரு சில முகாம்களில் உணவுப் பொருட்களுக்கும் மற்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்துலக நாடுகளின் உதவியை ஃபிஜி நாடியுள்ளது.

ஃபிஜியின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்துலக நாடுகளும் நிவராண உதவிப் பொருட்களை ஃபிஜிக்கு அனுப்பி வைத்துள்ளன. ஆனால் சூறாவளிக் காற்றி னால் ஃபிஜியில் சாலைகள் பழுது அடைந்திருப்பதாலும் பல இடங் களில் தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருப்பதாலும் உதவிப் பொருட்கள் சென்று சேர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அனைத் துலக உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட புறநகர் பகுதி மக்களுடன் இன்னமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஆஸ்தி ரேலிய நிவாரண உதவி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஃபிஜியில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் சேதம் அடைந்த வீடுகளில் இந்த வீடும் ஒன்று, அந்த வீட்டினுள் தாயும் மகனும் சோகத்துடன் காணப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!