ஓல்ட் டிராஃபர்ட்: இந்தக் காற் பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் மீது சுமத்தப் படும் முக்கிய குற்றச்சாட்டே அவர்கள் முன்பு போல் இல்லாமல் அலுப்புத் தட்டும் வகையில் விளையாடுகின்றனர் என்பதும் ஓர் ஆட்டத்தில் வென்றால் பின்னர் அதுபோல் தொடர்ச்சியாக மற்ற ஆட்டங்களில் அவர்களால் ஆட முடிவதில்லை என்பதும்தான். ஆனால், நேற்று அதிகாலை யுனைடெட்டின் சொந்த மைதான மான ஓல்ட் டிராஃபர்டில் டென் மார்க்கின் மிட்யுலேண்ட் குழுவை யூரோப்பா லீக் போட்டியில் எதிர் கொண்ட யுனைடெட் இதையெல் லாம் தூக்கியெறிந்துவிட்டுத் தங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டப் பெயரான 'ரெட் டெவில்ஸ்' என்ற பெயருக்கு ஏற்றவாறு மிட்யுலேண் டின் தற்காப்பு அரணை மிச்சம் மீதி இல்லாமல் தகர்த்து 5-1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தனர்.
இதனால் மொத்த கோல் எண் ணிக்கை 6-3 என்ற நிலையை எட்ட, யுனைடெட் குழு காலிறு திக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் புகுத்தி காற்பந்து உலகிற்குத் தமது வரவை அறிவித் துள்ளார் இளம் தாக்குதல் ஆட்டக் காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட். 18 வயது 117 நாட்களே ஆன ரேஷ்ஃபர்ட், அனைத்து ஐரோப்பிய போட்டிகளில் மேன்யூ சார்பில் கோலடித்த ஆக இளம் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். முன்னதாக, 1964ஆம் ஆண்டில் 18 வயது 158 நாட்களை எட்டி இருந்தபோது டியூகார்டன் குழு விற்கெதிராக ஜார்ஜ் பெஸ்ட் கோல் அடித்திருந்ததே முந்தைய சாதனை யாக இருந்தது. ஆண்டர் ஹெரேரா, மெம்ஃபிஸ் டிப்பாய் ஆகியோர் மேன்யூவிற்காக தலா ஒரு கோலைப் புகுத்தினர். இன்னொரு கோல் எதிரணி வீரரின் சொந்த கோல் மூலம் வந்தது.