சேவல் சண்டையில் புரளும் ரூ.100 கோடி பந்தயப் பணம்

கோதாவரி: இந்த ஆண்டு பொங் கல் விழா சமயத்தில் நடைபெற உள்ள சேவல் சண்டைப் போட்டி யில் பந்தயப் பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டிப் புர ளும் என எதிர்பார்க்கப்படுவ தாக சேவல் சண்டைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண் டும் மகர சங்கராந்தியை முன் னிட்டு அதிகளவில் சேவல் சண்டை போட்டி நடத்தப்படும்.

சேவல் சண்டையிடும் சாதுர் யத்தை வைத்து அதற்கான போட்டித் தொகை நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு சேவல் மீது ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படும். தொடர்ந்து சேவல் வெற்றி பெறும் நிலையில் இந்தத் தொகை இரு மடங்காக உயரும். நிலம், சொத்துகளை அடமானம் வைத்து இச்சேவல் சண்டை பந்தயத்தில் பங்கு பெறுவோரும் உண்டு. இந்தச் சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி மூன்று நாட்களுக்கு இப் போட்டியை நடத்த போட்டியாளர் கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் 'கொடி பெண்டலு' என்ற சேவல் சண்டையை நடத்தவேண்டும் என்று ஆந்திரா அனுமதி கோரி யுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகள் 'கொடி பெண்டலு' என்ற சேவல் சண்டைக்கு பெயர் பெற்ற இடங்களாக விளங்குகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!