சிறுவனுக்கு மெஸ்ஸியின் பரிசு

காபூல்: உள்நாட்டுப் போரால் தத்தளித்து வரும் ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த முர்ட்டாஸா அகமதி (படம்) எனும் ஐந்து வயதுச் சிறுவனின் ஏக்கம் தீர்ந்தது. பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் ரசிகனான இவனுக்கு மெஸ்ஸி பெயர் பொறித்த சீருடையை அணிய வேண்டும் என்பது பலநாள் ஆசை. வறுமை காரணமாக அதை வாங்கித் தரமுடியாத நிலையில் இருந்த அவனுடைய தந்தை, மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சீருடை போல வண்ணம் கொண்ட ஒரு பாலித்தீன் பையில் '10' என மெஸ்ஸியின் எண்ணை எழுதி, அதைத் தம் மகனுக்கு மாட்டிவிட்டு காற்பந்து ஆடச் செய்தார். இந்தப் படம் இணையத்தில் வேகமாகப் பரவியது.

இது மெஸ்ஸியின் பார்வைக்குச் செல்ல, தமது கையெழுத்துடன் கூடிய தமது அர்ஜெண்டினா, பார்சிலோனா சீருடைகள் இரண்டையும் ஒரு பந்தையும் முர்ட்டாஸாவிற்குப் பரிசாக அனுப்பி வைத்தார். காபூலில் உள்ள தனது அலுவலகத்திற்கு முர்ட்டாஸாவை அழைத்து வந்து மெஸ்ஸியின் பரிசை அவனுக்கு வழங்கியது யுனிசெஃப் அமைப்பு. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!