16 இடங்களில் சுயமாக புகைப்படம் எடுக்க மும்பைப் போலிஸ் தடை

மும்பை: தொடர்ச்சியாக பல மரண சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து மும்பைப் போலிசார் 16 இடங்களில் பொதுமக்கள் சுயமாகப் புகைப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளனர். இதில் புகழ்பெற்ற பந்திரா பேன்ஸ்டாண்ட், மரின் டிரைவ், ஜுகூ சௌபாட்டிப் போன்ற இடங்களில் இளம் வயதினர் தங்கள் கைத்தொலைபேசியில் சுயமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவை பாதுகாப்பற்ற இடங்கள் என மும்பைப் போலிசார் வகைப் படுத்தியுள்ளனர். "இங்கு சுயமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. "இந்தத் தடையை மீறுவோருக்கு அமெரிக்க டாலர் 17 (S$ 24) அபராதமாக விதிக்கப்படும்," என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!