அழகி ஆ மெங்கின் பேத்தி விலங்கியல் தோட்டத்தின் புதுமுகம்

விலங்கியல் தோட்டத்திற்குப் புதிய முகம் கிடைத்திருக்கிறது, மீண்டும் ஒரு ஆ மெங்! சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் பிரபல முகமாகத் திகழ்ந்து, பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய சுமத்திரா ஓராங் உத்தானான ஆ மெங் 48வது வயதில் 2008, பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தது. இப்போது அதன் நான்கு வயது பேத்தி இஸ்தா, விலங்கியல் தோட்டத்தின் முகமாகத் தேர்வு செய்யப்பட் டிருக்கிறது. ஆ மெங்கின் ஆறு வாரிசு களில் ஒன்றான இஸ்தா, இனி மேல் பாட்டியின் இடத்தையும் பெயரையும் எடுத்துக்கொள்ளும். ஆ மெங்கின் கடைசி மகன் சாட்ரியா, பேத்திகள் கோமல், எண்டா, கொள்ளுப்பேரன்கள் பினோ, புத்திரா ஆகிய ஐவரும் ஆ மெங் குடும்பத்தில் உயிருடன் இருக்கும் மற்ற ஐந்து உறுப் பினர்கள்.

"வசீகரம் நிறைந்த இஸ்தா, பழைய ஆ மெங்கின் இடத்துக்குப் பொருத்தமானவள்," என்று கூறினார் ஓராங் உத்தான்களின் தலைமைப் பராமரிப்பாளரான திருகுமரன் சசி. இஸ்தா 2011 மார்ச் 8ஆம் தேதி பிறந்தாள். ஆ மெங்கின் மறைந்த மகளான சாயாங்கிற்கும் பிரான்ங்ஃபோர்ட் விலங்கியல் தோட்டத்தைச் சேர்ந்த கிளாடி காஸŸக்கும் பிறந்தவள். பாட்டி யைப் போலவே இஸ்தாவுக்கு டுரியான் மிகவும் பிடிக்கும். சுத்தத்தில் கறாராக இருப்பாள். ஆ மெங்கை 36 ஆண்டுகள் பராமரித்த 65 வயது திரு அழகப் பன் செல்லையா, இள வயது ஆ மெங் போலவே இஸ்தா இருப்ப தாகக் கூறினார்.

புதுமுகம் இஸ்தா, இந்த வகை பிராணிகளைக் கவனித்துக்கொள்வோருக்குத் தலைமை வகிக்கும் குமரன் சசியின் கையைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!