மூவரின் கனவை நனவாக்க வரும் ‘ஆண்டவன் கட்டளை’

அண்மையில் தனுஷ் தயாரிப்பில் 'காக்கா முட்டை' என்ற படத்தை இயக்கி குறுகிய காலத்தில் நல்ல இயக்குநர் என்று பெயர் பெற்றவர் மணிகண்டன். இவர் தற்பொழுது விஜய் சேதுபதியை வைத்து 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தை மார்ச் முதல் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் மணிகண்டன் கூறும்போது, "ஆண்டவன் கட்டளையில் விஜய் சேதுபதியை இயல்பாக காட்ட இருக்கிறேன். இந்தப் படம் என்னை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்," என்று நம்பிக்கையுடன் கூறினார். மேலும் படத்திற்கு 'யுத்தம் செய்' படத்தில் 'கன்னித்தீவு பெண்ணா, கட்டழகு கண்ணா' என்ற வெற்றிப் பாடலைக் கொடுத்த இசையமைப்பாளர் கே. இசையமைக்கிறார்.

அதுபற்றி அவர் கூறுகையில், "இந்தப் படத்திற்காக பத்துப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்திருந்தேன். அவற்றில் ஐந்து பாடல்கள் இயக்குநர் மணிகண்டன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த மெட்டுகளுக்குத் திரைப்படங்களில் அதிகமாக பயன்படுத்தாத கிராமத்து இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைக்கப் போகிறேன். மேலும் கிராமத்துப் பகுதிகளிலிருந்து கலைஞர்களை வரவழைத்துப் பாட வைக்கப் போகிறேன். இந்தப் படம் புதுமையான கதைக்களம் என்பதால் எனது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்ட நல்ல வாய்ப்பு என்று கருதுகிறேன். இந்தப் படம் எனது திரைப் பயணத்தில் திருப்புமுனைப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்," என்று இசையமைப்பாளர் கே.யும் நம்பிக்கையுடன் கூறுகிறார். அடுத்தடுத்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதியும் தனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!