சுவாமி கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்ற பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முட்டை, தக்காளி ஆகியவற் றையும் அவரது கார் மீது வீசித் தாக்கினர். போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கறுப்புக் கொடியும் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். கான்பூரின் நவாப்கஞ்ச் பகுதி யில் உள்ள விஎஸ்எஸ்டி கல்லூரி யில் ஒரு விழாவில் பங்கேற்க சுவாமி சென்றபோதுதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. கான்பூர் கல்லூரியில் அனைத் துலக தீவிரவாத எதிர்ப்பு தொடர் பான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்க சுவாமி சென்றார். அவர் மீதான தாக்குத் தலுக்கான காரணம் தெரிய வில்லை. என்றாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை, அது தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மேற்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!