முன்னாள் எம்.பி. லீ கூன் சோய் மறைவு

மக்கள் செயல் கட்சியின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவ ரும் பற்பல அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்தவருமான திரு லீ கூன் சோய் (படம்) நேற்றுக் காலை தமது வீட்டில் அமைதியாகக் காலமானார். அவருக்கு வயது 92. 1959 சட்டமன்றத் தேர்தலில் வென்ற மக்கள் செயல் கட்சியின் 42 வேட்பாளர்களில் திரு லீயும் ஒருவர். அவர் புக்கிட் பாஞ்சாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரா கப் பதவியேற்றார். தமது 25 ஆண்டுகால அரசி யல் வாழ்க்கையில் திரு லீ ஹோங் லிம், பிராடல் ஹைட்ஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னராகவும் பின்னர் கலாசார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகவும் வெளியுறவு அமைச்சின் மூத்த துணை அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.

மலாயாவிலும் சிங்கப்பூரிலும் ஒரு செய்தியாளர் என்ற முறை யில் திரு லீ, பல முக்கிய நிகழ்ச் சிகள் பற்றி எழுதியுள்ளார். அதில் ஒன்று 1955ல் மலாயாவின் புதிய முதலமைச்சராகத் தேர்வு பெற்ற துங்கு அப்துல் ரஹ்மானும் மலாயா கம்யூனிசக் கட்சியின் தலைவர் சின் பெங்கும் சந் தித்த கூட்டம் பற்றி எழுதிய செய்தி. சிங்கப்பூருக்கும் மலாயாவுக் கும் சுதந்திரம் கிடைப்பதில் ஆர் வம் கொண்ட திரு லீ, அரசிய லில் நுழைந்தார். இளம் சுதந்திர நாடாக சிங்கப்பூர் இருந்த காலத்தில் திரு லீ சர்ச்சைக் குரிய அரசதந்திரப் பணிகளுக்கு அனுப்பப்பட்டார். அதில் மிகவும் புகழ்பெற்றது, இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூ ருக்கும் இடையே நிலவிய கசப் புறவை இயல்பான நிலைக்கு கொண்டு வர திரு லீ உதவிய தாகும்.

1963 முதல் 1966 வரை மலே சியக் கூட்டரசு அமைவதில் எதிர்ப்புத் தெரிவித்து வந்த இந் தோனீசியா 'கன்ஃபிரான் டாசி' எனும் ஆயுதமேந்திய தாக்குதலை சிங்கப்பூர் மீது தொடுத்ததால், இரு நாடுகளுக் கிடையிலான உறவு கசப்படைந் தது. 1970 முதல் 1974 வரை இந் தோனீசியாவுக்கான சிங்கப்பூர் தூதராக நியமிக்கப்பட்ட திரு லீயின் பணி சவால்மிக்கதாக இருந்தது. சிங்கப்பூரில் வெடி குண்டுத் தாக்குதலை நடத்திய இரு இந்தோனீசிய வீரர்களை சிங்கப்பூர் தூக்கிலிட்டது. அப்போதிருந்த இந்தோனீசிய அதிபர் சுகார்த்தோ விடுத்த கரு ணை வேண்டுகோளைச் சிங்கப்பூர் நிராகரித்ததால், கோபக்கணல்கள் பறந்தன.

அப்போது சிங்கப் பூர் தூதராக இருந்த திரு லீ, தமக்கிருந்த ஜாவானிய கலாசார புரிந்துணர்வைக் கொண்டு இரு நாடுகளுக்கிடையே உறவை மீண்டும் சுமூகமான நிலைக்குக் கொண்டு வர உதவினார். பின்னர் 1973ல் இந்தோனீசியா வுக்கு வந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவை, ஜாவானிய கலாசாரத்தின் அடிப்படையில் பாத்திக் சட்டை அணியச் சொல்லி, சிங்கப்பூர் தூக்கிலிட்ட இரு ராணுவ வீரர்களின் கல்ல றையில் மலர் தூவ வைத்தார். இந்தச் செயல் அதற்கு அடுத்த ஆண்டே அதிபர் சுகார்த் தோவை சிங்கப்பூருக்கு வருகை புரிய வைத்தது. திரு லீக்கு ஏழு பிள்ளைகளும் 11 பேரப் பிள்ளைகளும் இருக் கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!