அணித் தலைவராக சேவாக்

துபாய்: வரும் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. மொத்தம் ஆறு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் களம் இறங்குகின்றன. அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 250 வீரர்கள் அந்த ஆறு அணிகளுக்காக விளை யாட இருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த அணி களில் ஒன்றான ஜெமினி அரே பியன்ஸ் அணியின் தலைவராக வும் இயக்குநராகவும் முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் நியமிக்கப் பட்டுள்ளார். "இந்தத் தொடரை பெரும் வெற்றி பெறச் செய்வதில் எல்லா வீரர்களும் ஆர்வமாக இருக்கின் றனர். இந்தப் பேருணர்வை திடலில் வெளிக்காட்டி, விறு விறுப்பான ஆட்டத்தை அவர்கள் வழங்குவார்கள் என்று எதிர்பார்க் கிறோம்," என்றார் ஜெமினி அரே பியன்ஸ் அணியின் உரிமை யாளர் நளின் கேத்தான்.

கெளதம் காம்பீர், சேவாக். ஏஎப்பி கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!