பத்துமலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிகிறது

கோலாலம்பூர்: பத்துமலை உச்சியில் மூண்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவின் துணைத்தலைவவர் முகம்மது சானி ஹருல் தெரிவித்தார். மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் மலை உச்சியில் சிறு அளவில் தொடர்ந்து தீ எரிந்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார். எனினும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பத்துமலையின் அடிவாரத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில் காட்டுத் தீ மூண்டதாகவும் அவர் கூறினார். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதிலும் கரும் புகை சூழ்ந்ததாகவும் இதனால் தாமான் தொழில்பேட்டையில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் சானி ஹருல் கூறினார். கடும் வெயில் காரணமாக காட்டுத் தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!