புரொஜெக்ட் ஸ்மைல் விரும்புவதெல்லாம் மீண்டும் புன்னகை

தமிழவேல்

புரொஜெக்ட் ஸ்மைல் விரும்புவதெல்லாம் மீண்டும் புன்னகை கவலையிலேயே மூழ்கிக் கிடக்கும் பல பெண்கள் சிரிப்பு என்பதையே மறந்துவிடுகின்றனர். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டத்தைத் தொடங்கியபோது எல்லாப் பெண்களின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்றே எண்ணினார் திருமதி உமா. அப்போது உள்ளூர் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர் களுடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

சில காலம் கழித்து அந்த நிகழ்ச்சித் தொடர் முடிவடைந்ததும் சேகரித்த பணத்தை ஓர் அதிகார பூர்வ அமைப்பின் கீழ்ப் பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று கருதிய உமா, 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தை நாடினார். அதன் விளைவாக 'லிஷா புரொஜெக்ட் ஸ்மைல்' பிறந்தது. தொடக்கத்தில் சிரமத்திலிருக் கும் பெண்களுக்கு நிதி உதவி மட்டுமே வழங்கி வந்தது இத்திட்டம்.ளPட் இந்த அறப்பணியில் ஈடுபட்ட திருமதி உமாவும் அவரது நண்பர் களும் தொடக்கத்தில் குடும்ப நல நிலைய இயக்குநர் ஒருவரின் ஆதரவையும் ஆலோசனைகளை யும் பெற்றனர்.

"பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி மட்டும் போதாது என்பது எங்கள் கருத்து. அவர் களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து, தங்கள் சொந்தக் கால் களில் நிற்கக்கூடிய திறன்களை யும் கொடுக்க விரும்பினோம்," என்றார் திருமதி உமா. அப்போது இவர்களது அமைப்பு மூலம் உதவி பெற்று வந்த பெண்களும் தங்களுக்குத் தையல், வண்ணம் தீட்டுவது போன்ற திறன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருத்துரைத்தனர். அதன் பொருட்டு சம்பந்தப்பட்ட பல அமைப்புகளையும் வர்த்தகங் களையும் உமாவும் அவரது நண்பர் களும் அணுகினர். அவர்களின் உதவி மூலமும் தொண்டூழியர் களின் உதவியுடனும் திறன் பயிற்சி வகுப்புகளை புரொஜெக்ட் ஸ்மைல் தொடங்கியது.

நகை செய்யப் பயிற்சி பெறும் பெண்மணிக்கு உதவுகின்றனர் தொண்டூழியர்கள். வண்ணம் தீட்டுவது, கைவினைப் பொருட்களைச் செய்வது போன்ற பயிற்சிகளும் இங்கு பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. படங்கள்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!