இந்திய மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு

நெல்லூரிலிருந்து வில்சன் சைலஸ்

சிங்கப்பூரின் 'செம்ப்கார்ப் இண் டஸ்ட்ரீஸ்' நிறுவனம் இந்தியா வில் தனது அனல் மின்நிலை யத்தை நேற்று அதிகாரபூர்வ மாகத் திறந்துவைத்துள்ளது. நிலக்கரி மூலம் மொத்தம் 2,640 மெகா வாட்ஸ் மின்சார சக்தியை உற்பத்தி செய்யும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 20,000 கோடி இந்திய ரூபாய்) பெறுமான திட்டம் இது. 'தெர்மல் பவர்டெக் கார்ப் பரேஷன் இந்தியா' என்னும் துணை நிறுவனம் மூலம் செம்ப் கார்ப் அனல் மின் உற்பத்தியை செயல்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அனல் மின் நிலையத்தின் வர்த் தகப் பணிகள் முழுமையாகத் தொடங்கப்பட்டன. அதன் அதிகாரபூர்வத் திறப்பு விழா நேற்று நெல்லூரில் நடந்தது. சிங்கப்பூர் வர்த்தக, தொழில் (தொழில்) அமைச்சர் எஸ்.ஈஸ்வர னும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் 'செம்ப்கார்ப் காயத்ரி' என்னும் அனல் மினல் நிலையத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச் சர் எ-ஸ். ஈஸ்வரன், "விவேக நகரங்கள் (smart cities) அறி முகத்தின் மூலம் இந்தியா பெரிய அளவில் நகரமயமாகிக்கொண்டு வருகிறது. அதனால் மின்சாரத் துக்கான தேவை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. செம்ப்கார்ப் காயத்ரி அனல் மின் நிலையம் இந்தியாவின் மின்துறையில் முக்கிய பங்காற்றும்," என்றார்.

'செம்ப்கார்ப் காயத்ரி' அனல்மின் நிலையத்தைத் திறந்துவைத்த (வலமிருந்து ஆறாவது) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் (அவருக்கு அருகில்) சிங்கப்பூர் வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ். ஈஸ்வரனும். செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைவர் ஆங் கோங் ஹுவா (இடக்கோடி), உடன் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேங் கின் ஃபெய் (வலமிருந்து நான்காவது) மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சர்கள். படம்: செம்ப்கார்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!