மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி: மூவர் மீது குற்றச்சாட்டு

மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்ததாக மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஓர் ஆடவரும் இரண்டு பெண் களும் அடங்குவர். 25 வயது பென்ஜமின் லிங் ஜியாலியாங், 52 வயது ஜூடி வீ ஆய் வோங், 45 வயது ஃபோங் லிங் லிங் ஆகியோர் திருவாட்டி கிறிஸ்டல் லிம் என்பவரிடம் 250,000 அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டியதாக நம்பப்படுகிறது. கேட்ட பணத்தைக் கொடுக் காவிடில் சகோதரர்களான திரு இங் சீ ஹாவ், திரு இங் சியா ஹாவ் ஆகியோர் துன்புறுத்தப் படுவர் என்று திருவாட்டி லிம்மை இந்த மூவரும் மிரட்டியதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த இந்த இரண்டு சகோதரர்களும் சில நாட்களுக்கு முன்பு பினாங்கில் கடத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் திருவாட்டி லிம்மின் வருங்காலக் கணவர்.

பணம் கேட்டு தொலைபேசி அழைப்பு வந்ததும் 29 வயது திருவாட்டி லிம் போலிசாரிடம் புகார் செய்தார். இதனை அடுத்து, மலேசிய போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு சகோதரர்களும் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் கடத்தி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. ஹோட்டலுக்கு விரைந்த மலேசிய போலிசார் சகோதரர்களைக் காப் பாற்றி நான்கு பேரைக் கைது செய்தனர். சகோதரர்கள் எவ்வித காயமின்றி காப்பாற்றப்பட்ட அதே நாளில் மத்திய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக நான்கு சிங்கப்பூரர்களைக் கைது செய் தனர். இந்நிலையில், திருவாட்டி லிம்முக்கு மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் மூவரும் விசாரணை நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

கடத்தப்பட்ட இரு சகோதரர்களும் துன்புறுத்தப்படாமல் இருக்க 250,000 அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டல் விடுத்த மூவர் (படம்) அடுத்த மாதம் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் ஐந்தாண்டு வரை சிறை விதிக்கப்படலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!