கோப்பிக்கடை ஊழியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் ஆடவர் ஒருவரை நேற்று முன்தினம் கொலை செய்த குற்றத்தின் பேரில் 50 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஹவ்காங் அவென்யூ 3 புளோக் 23ன் தரைத்தளத்தில் 38 வயது ஆங் கிம் கியேட்டுக்கு கோப்பிக் கடை ஊழியரான கோர் சூங் மெங் மரணம் விளைவித்த தாக நம்பப்படுகிறது. இந்தக் குற்றம் அதிகாலை 2.09 மணியிலிருந்து 2.11 மணிக்குள் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் காயமடைந்த நிலையில் ஆங் கண்டெடுக் கப்பட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதிகாலை 3.28 மணிக்கு இவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. சம்பவம் நடந்த அதே நாள் காலையில் கோப்பிக்கடை ஒன்றில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றி வந்த கோர் கைது செய்யப்பட்டார். கோரிடம் விசாரணை நடத்த போலிசார் அவரை விசாரணைக் காவலில் வைத்துள்ளனர். அடுத்த மாதம் 4ஆம் தேதி கோர் நீதிமன்றம் முன் நிறுத்தப் படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆங் கிம் கியேட் என்பவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் கோர் சூங் மெங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!