83.8% மாணவர்கள் குறைந்தது ஐந்து பாடங்களில் தேர்ச்சி

சுதாஸகி ராமன்

குடும்பச் சூழ்நிலை எந்த வகையிலும் தனது கல்வியைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்ட உட்லண்ட்ஸ் உயர் நிலைப் பள்ளி மாணவர் ம. தினேஷ் பழனி, கடந்த ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் ('ஜிசிஇ') சாதாரண நிலைத் ('ஓ') தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று ஒற் றைப் பெற்றாரான தனது தாயாருக்கும் தாத்தாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

தந்தையை விட்டுப் பிரிந்து தனது தாயாரின் கவனிப்பில் வளர்ந்த தினேஷ், கல்வியில் காட்டிய ஈடுபாட்டினால் தேர்வில் 17 புள்ளிகளைப் பெற்றார். அறிவியல் பாடங்களில் உள்ள நாட்டத்தினால் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து ரசாயனப் பொறியியல் அல்லது விமானத் துறைத் தொழில்நுட்பம் பயில தினேஷ் தீர்மானித்துள்ளார். வசதி குறைந்த குடும்பப் பின் னணியைக் கொண்டாலும், பள்ளி யில் சிறப்பாகச் செய்ய மனம் தள ராமல் தினேஷ் உழைத்து தனது தம்பிக்கும் தூண்டுகோலாக இருக்கிறார். ஆசிரியர், சக மாண வர்கள் அளித்த உதவியாலும் ஊக்குவிப்பாலும் அவர் கல்வியில் முன்னேறினார்.

(இடமிருந்து) தமது தமிழாசிரியர் திரு த. திருமாறன், ஆசிரியர் திரு ரூடி இரவான், உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி முதல்வர் திருவாட்டி டான் கெ ஸின் ஆகியோருடன் மாணவர் ம. தினேஷ் பழனி (இடமிருந்து 3வது). படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!