14 பேரைக் கொன்று மாண்டார்

இந்தியாவில் போலிசே அதிர்ச்சி இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகருக்கு அருகே நேற்று அதிகாலை நேரத்தில் 35 வயது ஆடவர் ஒரு வர் தன் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி போலிசாரையே அதிர்ச்சியில் உறையவைத்து விட்டது. எல்லாரையும் கொன்றுவிட்டு அந்த ஆடவர் தானும் தற்கொலை செய்துகொண்டார் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிய அந்த ஆடவரின் உடலுக்கு அருகே பெரிய கத்தி ஒன்று காணப்பட்டது.

மாண்டவர்களில் எட்டுப் பேர் சிறார்கள். அந்த ஆடவரின் மனைவி ஒருவர், சகோதரிகள் மூன்று பேர், அவரின் பெற்றோர் இருவர். ஒரே ஒரு மாது மட்டும் காயத்துடன் தப்பினார். அவர் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று போலிஸ் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகருக்கு அருகே உள்ளது கசார்வடாவலி என்ற பகுதி. இது தானே மாநகர காவல் எல்லைக் குட்பட்ட வட்டாரம். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹாசன் அன்வர் வேர்கர் என்பவர் கணக்குத் தணிக்கையாளர். இவர் கோத்படார் ரோடு என்ற பகுதியில் ஒரு மாடி வீட்டில் குடும்பத்தாருடன் வசித்துவந்தார். இவரின் வீட்டில் சனிக்கிழமை இரவில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கு வந்திருந்த உறவினர் கள் விருந்து முடிந்ததும் வீட்டி லேயே தங்கினர். "நேற்று அதி காலை (அதாவது சனிக்கிழமை பின்னிரவில்) 2 மணிக்கும் 2.30 மணிக்கும் இடையில் கொலைகள் அரங்கேறி இருப்பதாகத் தெரி கிறது," என்று தானே போலிஸ் நிலையத்தின் கூட்டு ஆணையர் அசுடோஸ் தும்பேர் கூறினார். வீட்டில் மூன்று அறைகள் உள்ளன. வேர்கர் தன் மனைவி யுடன் ஓர் அறையில் இருந்தார். மாடியில் அவரின் இரண்டு பெண்களும் தூங்கினர். தரைத் தளத்தில் உள்ள அறைகளில் சகோதரிகளும் பெற்றோரும் தூங்கினர். வீட்டின் எல்லா கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு மூடிவிட்டு, வேர்கர் தூக்கத்தில் இருந்த உறவினர்களைக் கத்தி யால் கழுத்தை அறுத்துவிட்டார். எல்லாரின் கதையை முடித்து விட்டு அவர் தூக்கில் தொங்கி விட்டார். சகோதரிகளில் ஒரு வரான சுபியா பர்மர் என்பவரின் கழுத்தை வேர்கர் அறுத்துவிட்டார் என்றாலும் அவர் உதவிக்குச் சத்தம் போட்டார்.

14 கொலைகள் விழுந்த வீடு இதுதான். நோக்கம் தெரியவில்லை. போலிஸ் புலன்விசாரணை தொடங்கியுள்ளது. படங்கள்: இந்திய ஊடகங்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!