கொசு பெருக இடம் தந்தால் $200 அபராதம்

சுதாஸகி ராமன்

டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை இவ் வாண்டு உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து டெங்கி தொற்றைச் சமாளிக்கும் முயற்சிகளை சுற்றுப்புற, நீர்வள அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது. அம்முயற்சிகளின் ஓர் அங்க மாக கொசுக்கள் இனப்பெருக்கம் கண்டுபிடிக்கப்படும் அனைத்து வீடுகளுக்கும் அபராதம் விதிக் கப்படும். இது வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். இதற்கு முன்பு டெங்கி பரவிய பகுதிகளில் மட்டும்தான் இந்த அபராதம் நடப்பில் இருந்தது. டெங்கி பரவியிருக்கும் பகுதி களில் மட்டுமின்றி டெங்கி பரவா பகுதிகளிலும் இருக்கும் வீடு களில் கொசு இனப்பெருக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வீடுகளின் உரிமையாளர் களுக்கு $200 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாண்டின் டெங்கி தடுப்பு இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தபோது சுற்றுப் புற, நீர்வள அமைச்சர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனை அறிவித்தார். கட்டுமானத் தளங்கள் போன்ற இடங்களில் டெங்கி தடுப்பு நடவடிக்கைகளை தேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சு எடுத்து வந்தாலும் வீடுகளி லேயே கொசு இனப்பெருக்கம் அதிகம் உள்ளது என்று அமைச்சர் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார். கொசு இனப்பெருக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை தமது அமைச்சு குடியிருப்பாளர்களி டையே அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

அடித்தள அமைப்புத் தலைவர்கள், மக்கள் கழகத்தின் சமூக அவசரகால, மீட்புக் குழுக்களின் தொண்டூழியர்கள் என்று பயிற்சி வழங்கப்பட்ட 10,000க்கு மேற் பட்ட தொண்டூழியர்கள், வீடுகளுக்குச் சென்று டெங்கியைப் பற்றி குடியிருப்பாளர்களுக்கு எடுத்துரைப்பர். வழக்கமாக மார்ச் மாதத்தி லிருந்து ஜூன் மாதம்வரை இயங்கும் இந்த டெங்கி தடுப்பு இயக்கம், இம்முறை முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் ஒரு வாரத்திலேயே இனப்பெருக்கம் கண்டுவிடும். வீடுகளில் டெங்கி நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் நடக்கும் இடங் களைக் கண்டறிந்து அவற்றை இரு வாரங்களுக்குத் தொடர்ந்து சுத்தம் செய்ய ஊக்குவிப்பதே நேற்று தொடங்கப்பட்ட இயக்கத் தின் நோக்கம். இந்த ஆண்டில் டெங்கி காரணமாக 30,000 பேர் வரை பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக் கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!