தொழிலதிபர் மீது மேக்னா ராஜ் புகார்

தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420' ஆகிய படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். பழம்பெரும் கன்னட நடிகர் சுந்தர்ராஜின் மகளான இவர் 2009ஆம் ஆண்டு 'பெந்து அப்பாராவ்' தெலுங்குப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தர்மபுரியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜனார்த்தனன் என்பவர், பெங்களூர் காவல்துறையில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. "நடிகை மேக்னா ராஜ் என்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்.

எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் எடுத்துச் சென்றுவிட்டார்," என்று ஜனார்த்தனம் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் அவர் சொல்வதில் உண்மை இல்லை என கண்டுபிடித்த போலிசார், அவரது புகாரைத் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், பொய் புகார் கொடுத்ததாகத் தொழிலதிபர் ஜனார்த்தனன் மீது நடிகை மேக்னா சார்பில் அவரது தாயார் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!