வாகனம் ஓட்டியபோது கையடக்க சாதனம் - நாளொன்றுக்கு எட்டுப் பேர் பிடிபட்டனர்

வாகனம் ஓட்டியவாறே கைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியதற்காக ஒவ்வொரு நாளும் எட்டுப் பேர் பிடிபட்டதாக போக்குவரத்து போலிசாரின் அண்மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டின் நிலவரம். இவ்வாறு அதிக எண்ணிக்கை யில் வாகனமோட்டிகள் பிடிபடுவது இன்னும் இங்கு தவறான பழக் கங்கள் பரவலாகக் காணப்படு வதை உணர்த்துவதாக நிபுணர் கள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் கடந்த ஆண் டில் பிடிபட்ட வாகனமோட்டிகளின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் குறைவே. கடந்த 2013ஆம் ஆண்டு 3,572 வாகனமோட்டிகளும் 2014 ஆம் ஆண்டில் 3,358 வாகன மோட்டிகளும் பிடிபட்டனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3,011ஆகக் குறைந்தது.

இது சரா சரியாக நாளொன்றுக்கு 8 பேர் என்ற கணக்காகும். வாகனம் ஓட் டும்போது கைபேசி போன்ற சாத னங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த எண்ணிக்கைக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம் என் கின்றனர் நிபுணர்கள். சிறிய கைக்கணினி (டேப்லட் பிசி) உள்ளிட்ட சாதனங்களை வாகனம் ஓட்டிக்கொண்டே கை யில் பிடித்திருப்பதும் பயன்படுத்து வதும் சட்டவிரோதம் என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறி விக்கப்பட்டது. அதற்கேற்ற வகை யில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் அப்போது திருத்தப்பட்டது. அதற்கு முன்பு வரையில் கைபேசிக்கு மட்டும் பொருந்தும் வகையில் சட்டம் இருந்தது. வாக னம் ஓட்டும்போது கைபேசியைப் கையில் பிடித்திருப்பதும் பயன் படுத்துவதும் குற்றம் என்று இருந்தது.

பின்னர் அது பிற கையடக்க சாதனங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டது. இச்சாதனங்களை வாக னத்திற்குள் பிடிப்பான் ஒன்றில் பொருத்தி பயன்படுத்துவதற்குத் தடை இல்லை. அதேபோல வாகனம் நிலையாக நிறுத்தப்பட்டு இருக்கும்போது இச்சாதனங் களைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமாகாது. சட்டவிரோதமாக கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி யவாறே வாகனம் ஓட்டுவோர் முதல் முறையாகப் பிடிபடும்போது ஆயிரம் வெள்ளி அபராதமோ ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இந்த இரண்டுமோ விதிக்கப்படலாம். சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் வாகனமோட்டிகள் திருந்த வேண் டும் என பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான சிங்கப்பூர் நிலை யத்தைச் சேர்ந்த ஜெரர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!