‘கார்கள் இல்லாத ஞாயிறு’ திட்டம் தொடங்கியது

'கார்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமை கள்' முன்னோடித் திட்டத்துக்கு ஆதரவு இருக்குமானால் அந்தத் திட்டம் நிரந்தரமான ஒன்றாக ஆகும். அதோடு மேலும் பல பகுதிகளுக்கும் அது விரிவு படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று 'கார்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமை' என்னும் முன்னோடித் திட்டம் பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது. அதன்படி குடிமைப் பகுதிகளி லும் மத்திய வர்த்தக வட்டாரப் பகுதிகளிலும் கார்களுக்குச் சாலைகள் அடைக்கப்பட்டன. தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் பரிசோதனையின் போது இத்திட்டத்துக்கு ஆதரவு கிடைத்தால் திட்டம் நிரந்தரமாகும் என்றார்.

கார்கள் குறைந்த நாடாக சிங்கப்பூரை மாற்றும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக இந்த முன்னோடித் திட்டம் இடம்பெறு கிறது. இப்போது முதல் ஜூலை மாதம் வரையில் ஒவ்வொரு மாத மும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பாடாங்கைச் சுற்றிலும் உள்ள சாலைகள் கார்களுக்கு மூடப் படும். நூற்றுக்கணக்கான சைக்கி ளோட்டிகள், ஓட்டக்காரர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் நேற்று நடந் தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுடன் சேர்ந்து அமைச்சர் வோங், கொடி அசைத்து அந்த ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்தருந்தவர் களின் எண்ணிக்கை ஊக்கமளிப் பதாக அமைச்சர் வோங் கூறினார். "வீதி எங்கும் பார்த்தால் ஒரே மக்களாகத் தெரிந்தது. சாலை களில் கார்கள் இல்லாமல் மக்களைக் காண்பதுதான் நமது இலக்கு," என்றார் அவர்.

'கார்கள் இல்லாத ஞாயிறு' திட்டம் அறிமுகம் கண்ட நிகழ்ச்சியில் சைக்கிளோட்டியவாறு பங்கேற்ற போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் மகிழ்ச்சி தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!