மறைந்த லீ கூன் சோய்க்கு பிரதமர் லீ புகழாரம்

மறைந்த லீ கூன் சோய் இறுதி வரை மனஉறுதி மிக்கவராகவும் விசுவாசியாகவும் திகழ்ந்ததாகப் பிரதமர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார். மக்கள் செயல் கட்சியின் முன்னோடி உறுப்பினர்களில் ஒரு வரும் முன்னாள் அமைச்சருமான திரு லீ கூன் சோய் நேற்று முன்தினம் தமது 92வது வயதில் காலமானார். இரண்டு வார காலம் நிமோனி யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது துணைவியார் திருவாட்டி எங் ஆ சியாமுக்கு மூன்று பக்க அனுதாபக் கடிதம் அனுப்பி உள்ள பிரதமர் லீ, பழங்கால நிகழ்வுகளை அதில் நினைவுகூர்ந்துள்ளார். 'கேசி' என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட லீ கூன் சோயை சிங்கப்பூரின் முதல் வெளியுறவு அமைச்சர் திரு எஸ். ராஜரத்னம் 1959ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியில் இணைத்தார்.

அதுவரை செய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு சோய், சிங்கப்பூரையும் இந்த வட்டா ரத்தையும் பாதித்த முக்கிய நிகழ் வுகளை நேரில் கண்டவர். லண்டனில் நடைபெற்ற மெர் தேக்கா பேச்சு, சிங்கப்பூரில் நிகழ்ந்த சுய அரசாங்க விவாதம் போன்றவற்றுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர் அவர். எந்தவொரு நெருக்கடிக்கும் அடிபணியாத துணிச்சலானவர் என்ற பட்டத்தைப் பெற திரு சோய் தகுதியானவர் என்று சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ பாராட்டியதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். 1960களில் மசெகவில் இருந்த கம்யூனிச ஆதரவுப் பிரிவினர் தனி யாகச் சென்று பாரிசான் சோச லிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய போது அதில் வந்து இணையுமாறு லீ கூன் சோய் வற்புறுத்தப்பட்ட தாகவும் சேர மறுத்தபோது அவருக்கு அந்த இயக்கத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 1961ஆம் ஆண்டு துப்பாக்கித் தோட்டா ஒன்றுடன் இணைக்கப்பட்ட கொலை மிரட் டல் கடிதமும் அவருக்கு அனுப்பப் பட்டது. ஆயிரக்கணக்கான சீன உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்று திரண்டு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி அவர் மீது அழுகிய ஆப்பிள்களை வீசினர். 'லீ கூன் சோய் சவப்பெட்டிக்குச் செல்வாய்' என்றும் அந்த மாண வர்கள் முழக்கமிட்டனர். இருப்பினும் இறுதிவரை நிலை குலையாமலும் விசுவாசத்துடனும் அவர் திகழ்ந்தார் என்றார் பிரதமர்.

2013ஆம் ஆண்டு திரு லீ கூன் சாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!