எம்ஜிஆர் படத்தின் மறுபதிப்பில் விஜய்

விஜய் தற்போது 'தெறி' படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும் ஏமி ஜாக்சனும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்குப் பிறகு விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு பரதன் இயக்கிய 'அழகிய தமிழ் மகன்' படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதுபோல் புதிய படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எம்ஜிஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' என்ற படத்தை தயாரித்த விஜயா புரொடக் ஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றது. எனவே இந்த படம் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் மறுபதிப்பு என்றும் இப்போதுள்ள இளையர்களுக்கேற்ப திரைக்கதை மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் ஒரு எம்ஜிஆர் பயப்படுபவராகவும் மற்றொருவர் வீரனாகவும் நடித்திருப்பார். இந்த கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று பரதன் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!