நடிகர் குமரிமுத்து காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். அவருக்கு வயது 77. 'ஊமை விழிகள்', 'முள்ளும் மலரும்', 'பொங்கி வரும் காவேரி', 'இது நம்ம ஆளு', 'புது வசந்தம்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் குமரிமுத்து. திரையில் இவருடைய சிரிப்புதான் மிகப் பிரபலம். இவரின் வித்தியாசமான சிரிப்பு அனைவரையும் பயமுறுத்துவது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும். சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த குமரி முத்து, அரசியல் கட்சியான திமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமரிமுத்து அதற்காக சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!