தமிழவேல்
இனிமேல் விவாகரத்து கோரும் தம்பதியர், குறிப்பாக இளம் பிள்ளைகளைக் கொண்ட தம்பதியர் விவாகரத்திற்கு முந்திய கட்டாய பெற்றோர் ஆலோசனைத் திட்டத்தில் பங்கேற்கவேண்டும். மகளிர் சாசனத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை சாத்தியமாகிறது. மாறி வரும் சமூக சூழலில் திருமணத்தின் போக்கும் மாறி வருகிறது என்பதால் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லுதல், அதி கரித்து வரும் விவாகரத்துகள், குடும்பத் தலைவர்களாகவும் வரு மானம் ஈட்டுவதிலும் பெண்கள் பிரதான பொறுப்பு வகிக்கும் எண் ணிக்கை சிறிய அளவில் ஆனால் அதிகரித்து வரும் போக்கு ஆகிய சமூக மாற்றங்களை அமைச்சர் சுட்டினார்.
இதனால் கடந்த 1961ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் சாசனத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பரிந்துரைக்கப்பட்ட மாற்றங் களில் முக்கியமாக திருமணம் செய்துகொள்ள விரும்பும் தம்பதி யரில் ஒருவர் 21 வயதுக்குக் குறைவாக இருந்தால் அத்தம்பதி யர் கட்டாய திருமண தயார்நிலைத் திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். இதுவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண், பெண் ணில் ஒருவர் அல்லது இருவரும் 18 வயதுக்குக் கீழ் இருந்தால்தான் அத்தகைய திட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என இருந்தது. அத்துடன் இளம் பிள்ளை களைக் கொண்ட தம்பதியர் விவாகரத்து கோரினால் அவர்கள் கட்டாய பெற்றோர் ஆலோசனைத் திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதும் புதிய பரிந்துரைகளில் ஒன்று.