ஸிக்கா: கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள்

ஸிக்கா நோய்க்கிருமி மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாக கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஸிக்கா நோய்க்கிருமி கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தேசிய சுற்றுப்புற முகவை, தொடர்ந்து அதைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், அந்த நோய்க்கிருமி சிங்கப்பூருக்குள் புகுந்துவிடும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் வாரியமும் சுகாதார அமைச்சும் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கெனவே முடுக்கிவிட்டுள்ள தாக டாக்டர் கோர் சொன்னார். எடுத்துக்காட்டாக, தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் அறி விக்கப்பட வேண்டிய தொற்று நோய்ப் பட்டியலில் ஸிக்கா கிருமித்தொற்றும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

அண்மையில், பிரேசிலில் சிறிய மண்டை ஓட்டுடன் கூடிய தலை, மற்ற நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் அதிகம் பரவு வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து ஸிக்காவை எதிர்கொள்ளும் வகையில் இன் னும் பல நடவடிக்கைகளை அறி முகப்படுத்தவுள்ளதாகக் கூறி னார் டாக்டர் கோ. ஸிக்கா கிருமித்தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதி இன்னும் பல பொது மருத்துவமனை ஆய்வகங்களுக்கு விரிவுபடுத்தப்படும். காய்ச்சல், சிராய்ப்புகள் மற்றும் டெங்கி பாதிப்பு இருக்க லாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் ரத்த மாதிரி களைச் சேகரித்து ஸிக்கா பரிசோதனைக்கும் உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய சுற்றுப் புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!