பாக்தாத் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 33 பேர் மரணம்

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள சந்தைப் பகுதியில் அடுத்தடுத்து குண்டு கள் வெடித்ததில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த குண்டு வெடிப்புகளில் சுமார் 80 பேர் காயம் அடைந்தனர். அந்தக் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராணுவச் சாவடியையும் ஐஎஸ் போராளிகள் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் பலியானதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ளன. ஈராக்கில் உள்ள ஐஎஸ் போராளிகள் அடிக்கடி இது போன்ற தற்கொலைத் தாக்குதல் களில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்தாத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது சகஜம் என்ற போதிலும் வன்செயல்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் ஐஎஸ் போராளிகளை ஒடுக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் போராளி களின் இலக்குகளை குறிவைத்து குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. ஐஎஸ் போராளி களின் நடமாட்டத்தை கட்டுப் படுத்த ஈராக்கிய அரசாங்கமும் பாக்தாத் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்புச் சுவர்களை அமைத்து வருகிறது.

பாக்தாத்தில் குண்டு வெடித்த இடத்தில் ஒரு சிறுவன் நடந்து செல்கிறான். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!