குடியேறிகளின் தற்காலிக முகாம்களை அகற்ற பிரான்ஸ் நடவடிக்கை

பாரிஸ்: பிரான்சின் துறைமுகப் பகுதியில் குடியேறிகள் அமைத் துள்ள தற்காலிக முகாம்களை அகற்றும் நடவடிக்கையை பிரான்ஸ் தொடங்கியுள்ளது. அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் மீது குடியேறிகள் கற்களை வீசியதைத் தொடர்ந்து அவர்கள் மீது கலகத் தடுப்பு போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் கூறினர். அங்கு முகாமிட்டுள்ள குடியேறிகள் அவசியம் பிரான்சின் வேறு ஒரு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரான்சின் இந்த நடவடிக்கை அந்நாட்டிலேயே தாங்கள் அடைக் கலம் நாட வேண்டி வருமோ என்றும் பிரிட்டன் செல்லும் தங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகக்கூடும் என்றும் குடியேறி களில் பலர் அச்சம் கொண்டுள் ளனர். அந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களில் பெரும் பாலானோர் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வர்கள்.

கூடாரங்கள் மீது இரு குடியேறிகள் நின்றுகொண்டிருக்கும் வேளையில் தற்காலிக கூடாரங்களை அகற்றும் பணியில் பிரெஞ்சு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனைச் சென்றுசேர்வதற்காக பிரான்ஸ் துறைமுகப் பகுதியில் ஏராளமான குடியேறிகளும் அகதிகளும் முகாமிட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!