மகாதீர் - லிம் கிட் சியாங் சந்திப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவை சந்தித்துப் பேசினார். தற்போதைய தேசிய நிலவரம் குறித்து திரு மகாதீருடன் தாம் பேச்சு நடத்தியதாக திரு லிம் கிட் சியாங் பின்னர் கூறினார். அந்த சந்திப்பு நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நம்பிக்கையைத் தந்திருப்பதாக திரு லிம் கூறினார். அம்னோவிலிருந்து விலகிய மகாதீர் அடுத்ததாக பிரதமர் நஜிப் ரசாக்கை வெளியேற்றும் இயக்கத்துக்குத் தலைமை தாங்கக்கூடும் என்ற யூகங்கள் பெருகிவரும் வேளையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

"திரு மகாதீரைச் சந்தித்து நாட்டின் நடப்புப் பற்றி விவாதித்தேன். முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமையும் சந்தித்து அவரது மார்ச் 27 கூட்டம் பற்றிப் பேசினேன். இந்த சந்திப்புகள், தேசியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற ஊக்கத்தைத் தந்துள்ளன," என்று லிம் கூறினார். 'மலேசியாவைக் காக்கும்' முயற்சிக்கு ஜனநாயக செயல் கட்சி முழு ஒத்துழைப்புத் தரும் என்று அறிவித்த லிம் அதுபற்றி மேலும் விவரிக்க வில்லை. - எதிர்க்கட்சித் தலைவர் களுக்கும் திரு நஜிப்பை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மாபெரும் கூட்டணி உருவாக வேண்டும் என்று திரு லிம் சென்ற ஆண்டு கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!