அஸ்வின்: இந்திய பந்துவீச்சு சிறப்பாக உள்ளது

மிர்பூர்: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டம் தொடர்பாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர், "இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. கடைசி நேர பந்து வீச்சில் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். இதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது கடைசி நேர பந்து வீச்சில் மேம்பட்டு இருக்கிறோம்," என்று அஸ்வின் கூறியுள்ளார். "ஆசிஷ் நெக்ராவும் ஜஸ்பிரித் பும்ராவும் நேர்த்தியுடன் பந்து வீசுகிறார்கள். இருவரும் தொடக்கத்திலும், கடைசி நேரத்திலும் அபாரமாக பந்து வீசுகிறார்கள். இதனால் மிடில் ஓவரில் எங்களால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிகிறது.

"பும்ராவுக்கு ஐ.பி.எல். போட்டி அனுபவம் மிகுந்த உதவியாக அமைந்தது. ஆசிஷ் நெக்ரா அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர். அவரது பந்துவீச்சு நிலையாக இருக்கிறது," என்று அஸ்வின் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!