அதிக சத்தமான ஒலி ஆபத்து

சுதாஸகி ராமன்

எம்­ஆர்டி ரயிலில் பயணம் செய்­யும்­போது மிகுந்த சத்­தத்­து­டன் இசையைக் கேட்கும் பய­ணி­களை நாம் பார்த்­தி­ருப்­போம். கைபே­சி­கள், இசை ஒலிக்­கும் கரு­வி­கள் போன்ற­வற்­றில் மட்­டு­மின்றி இசை நிகழ்ச்­சி­களி­லும் மதுக்­கூ­டங்களி­லும் சத்­த­மாக இசை கேட்டு மகிழ்­வது தற்போது இளை­யர்­களிடையே அதிகரித்து வரும் போக்காக இருப்பது தெரி­ய­வந்­துள்­ளது. பயணம் செய்­யும்­போது, படிக்­கும்­போது, உடற்­ப­யற்சி செய்­யும்­போது என்று பெரும்பாலான நேரங்களில் 'இயர்­பீஸ்' எனப்­படும் காது ஒலி­ப்பான் மூலம் சத்­த­மான இசையை இடை­வி­டா­மல் கேட்கும் இளை­யர்­கள் அதி­கப்­ப­டி­யான சத்­தத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய காது கேளாமை பிரச்­சினை­யால் பாதிப்­படை­யும் வாய்ப்­பு­கள் அதி­கமா­கிறது.

ஆறில் ஓர் இளை­ய­ருக்கு இவ்வகை காது கேளாமை ஏற்­ப­ட­லாம் என்று ஈராண்­டு­களுக்கு முன்பு தெமாசெக் பல­துறைத்­ தொ­ழிற்கல்­லூ­ரி­யின் உயிர்மருத்­து­வப் பொறி­யி­யல் துறை மாண­வர்­கள் நடத்­திய ஆய்வு முடி­வு­கள் குறிப்­பிட்­டன. தெமாசெக் பல­துறை­தொ­ழிற் கல்­லூ­ரியைச் சேர்ந்த 1,928 மாண­வர்­களின் போக்கை ஆராய்ந்த இந்த ஆய்வு, பொதுவாக சிங்கப்­பூர் இளை­யர்­களின் இசை கேட்கும் போக்கை வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளது. ஒட்­டு­மொத்­தத்­தில் சிங்கப்­பூர் இளை­யர்­களின் கேட்கும் போக்­கு­கள் நாளடை­வில் அவர்­களுடைய காது­களுக்­குப் பாதிப்­பு­களை ஏற்­படுத்­தும் எனக் கூறியுள்ளது செவிப்­பு­லன் கருவி உற்­பத்­தி­யா­ளர்­க­ளான சிவாண்­டோஸ் நிறு­வ­னம். இத்தகைய காது கேளாமை பற்றிய விழிப்பு­ணர்வு இளை­யர்­களிடையே குறைந்து காணப்­படு­வது வருந்தத்­தக்­கது என்­றார் அந்­நி­று­வ­னத்­தின் மூத்த ஒலி நிபுணர் ஏப்ரில் சொங்.

விழிப்புணர்வு சாலைக்காட்சியில் இளையர் ஒருவர் தாம் பொதுவாகக் கேட்கும் ஒலியின் அளவையும் அதனால் காதுகளில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாதிரிகள் மூலம் அறிந்துகொள்கிறார். உடனிருந்து உதவுபவர் நவீனா தியாகராஜன் (நடுவில்). படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!