வழிகாட்டிகளைப் பின்பற்றினர் போலிசார் - சிறுவர் பெஞ்சமின் லிம் வழக்கு குறித்து சட்ட அமைச்சர் கா. சண்முகம்

தமி­ழ­வேல்

போலிஸ் அதி­கா­ரி­கள் சாதா­ரண உடை­யி­லேயே 14 வயது பெஞ்ச­மின் லிம் பயின்ற பள்­ளிக்­குச் சென்ற­னர் என்­றும் இளை­யர்­களை எப்படி அணு­கு­வது என வரை­ய­றுக்­கும் வழி­காட்­டி­களை அவர்­கள் பின்­பற்­றி­னர் என்­றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார். பெஞ்ச­மின் லிம் விவ­கா­ரத்­தில் போலி­சார் வழி­காட்­டி­களுக்கு உட்­பட்டே செயல்­பட்­ட­னர் என்­றும் போலி­சார் பெஞ்ச­மினைத் தவ­றாக நடத்­தி­னர் என்­ப­தற்கு எந்த சான்­றும் இல்லை என்­றும் கூறிய அமைச்­சர் கா. சண்­மு­கம் தற்­போது உள்ள தக­வல்­களைக் கொண்டு பெஞ்ச­மின் உயிரை மாய்த்­துக்­கொண்ட­தற்கு போலிஸ் விசா­ரணை­தான் கார­ணம் என கூற­மு­டி­யாது என்­றும் குறிப்­பிட்­டார்.

ஜனவரி மாதம் 11 வயது சிறு­மியை மின்­தூக்­கி­யில் மான­ ­பங்கம் செய்­த­தாக அச்­சி­று­மி­யின் பெற்­றோர் போலி­சில் புகார் கொடுத்­ததைத் தொடர்ந்து 14 வயது பெஞ்ச­மின் போலி­சா­ரால் விசா­ரிக்­கப்­பட்­டார். விசா­ரணைக்­குப் பிறகு தமது தாயா­ரு­டன் வீடு திரும்­பிய பெஞ்ச­மின் அதே நாள் வீவக வீட்டு மாடி­யி­லி­ருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்­துக்­கொண்டார். இது குறித்து நேற்று நாடா­ளு­மன்றத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­வி­களுக்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக உரை­யாற்­றிய அமைச்­சர் சண்­மு­கம் பல விவ­ரங்களைத் தெளி­வு­படுத்­தினார்.

தற்­போது இது குறித்த நீதி­மன்ற விசா­ரணை நடப்­பில் உள்­ளது என்­றும் வழக்கு நீதி­மன்றத்­தில் விசா­ரணை­யில் உள்­ள­போது அது­பற்­றிக் கருத்­துரைப்­பது குற்­ற­மா­கக் கரு­தப்­ ­படும் என்­ப­தா­லும் பெஞ்ச­மி­னின் நினை­வு­களுக்கு மதிப்­பு­கொ­டுக்­க­வும் பாதிக்­கப்­பட்ட சிறு­மியைப் பாது­காக்­க­வும் இது­வரை தானும் தமது அமைச்­சும் இந்த விவ­கா­ரம் குறித்­துப் பேச­வில்லை என்றார் அமைச்­சர். ஆனால் இணை­யத்­தில் குறிப்­பாக 'தி ஆன்லைன் சிட்­டி­சன்' இணை­யத்­த­ளத்­தில் இந்த விவ­கா­ரம் குறித்து எழு­தப்­பட்ட பல கருத்­து­கள் தவ­றா­னவை என்­றும் அவை போலி­சா­ரின் தவ­றான செயல்­முறை­க­ளால்­தான் பெஞ்ச­மின் லிம் உயிரை மாய்த்­துக்­கொண்டார் எனும் தவ­றான கருத்தை முன்வைக்­கும் வித­மா­க­வும் அமைந்­துள்­ளது என்றார் உள்­துறை, சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம்.

மேலும் செய்திகள் - அச்சுப்பிரதியில்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!