ப.சிதம்பரத்தைக் கைது செய்யக்கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய அதிமுகவினர்

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ஏர்­செல், மலே­சி­யா­வின் மேக்­சிஸ் ஒப்­பந்த முறை­கேடு வழக்­கில் முன்­னாள் நிதி அமைச்­சர் ப.சிதம்ப­ரத்தைக் கைது செய்யக் கோரி இந்­திய நாடாளுமன்றத்­தில் அதி­முக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆர்ப்­பாட்­டம் செய்து மன்றத்தின் இரு அவை­களை­யும் செயல்பட­விடாமல் முடக்­கி­னர். 14 நாடு­களில் கார்த்தி சிதம்ப­ரம் முத­லீடு செய்­துள்­ள­தா­க­வும் சிங்கப்­பூ­ரில் உள்ள துணை நிறு­வ­னம் மூலம் இம்­மு­த­லீடு செய்யப்பட்­டுள்­ள­தா­க­வும் ஏர்­செல் = மேக்­சிஸ் ஒப்­பந்தத்­திற்குப் பின்னரே இம்­மு­த­லீ­டு­கள் செய்­யப்­பட்­ட­தா­க­வும் கடந்த சில நாட்­க­ளாக செய்­தி­கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவ­கா­ரத்தை நாடா­ளு­மன்றத்­தில் அதி­முக எம்­பிக்­கள் எழுப்­பி­னர்.

பின்னர் நாடா­ளு­மன்றம் மற்­றும் மேலவை மன்றம் கூடி­ய­தும் கார்த்தி சிதம்ப­ரம் மீது நட­வ­டிக்கை எடுக்­கக் கோரியும் ப.சிதம் பரத்தைக் கைது செய்யக்­கோரியும் முழக்கம் எழுப்பினர். அதனால் நாடாளு­மன்றத்தின் இரு அவை களும் முடங்கின. நாடா­ளு­மன்ற நாய­கர் சுமித்ரா மகா­ஜன், அதி­முக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்­டால் அவர்­க­ளது கோரிக் கைக் குறித்து விவா­திக்­க­லாம் என்றார். மத்­திய அமைச்­சர் வெங்கையா நாயு­டு­வும், அதி­மு­க­வி­னர் அமை­தி­யாக இருந்தால் ப.சிதம்ப­ரத்­துக்கு எதி­ரான தீர்­மா­னம் குறித்து விவா­திக்க அரசு தயார் என்றார். ஆனா­லும் அதி­முக எம்­பிக்­கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே­போல் மேலவை துணைத் தலை­வர் குரி­யனோ, அதி­மு­க­வி­னர் தங்க­ளது கோரிக்கையை மத்­திய அர­சி­டம்­தான் சொல்ல வேண்­டும் என்று சுட்­டிக்­காட்­டினார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், "கருத்து ஏதும் தெரி­விக்க விரும்ப­வில்லை," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!