நாளொன்றுக்கு இருமுறை பல் துலக்குவது சிறந்தது

மக்களில் பெரும்பாலானோர் காலையில் தூங்கி எழுந்ததும் முதல்வேளையாகப் பற்களைத் துலக்குகின்றனர். அப்படி காலை யில் ஒரு வேளை மட்டும் பல் துலக்கினால் போதுமா? போதாது என்கிறார் பேராசிரியரும் பல் மருத்துவருமான அனிஷா குப்தா. "தினமும் குறைந்தது இரு முறையாவது பல்துலக்க வேண் டும். இயலும் எனில் மும்முறை உணவு உண்டபின் துலக்கலாம்.

இரவில் உணவு உண்ட அரை மணி நேரம் கழித்தே பல்துலக்க வேண்டும். பல் துலக்குவதற்குக் குறைந்தது 2 நிமிடங்களாவது செலவழிக்கவேண்டும். இப்படி நாளொன்றுக்கு இருமுறை பல் துலக்குவது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடும். "இரவில் பல் துலக்குவதன் மூலம் பாக்டீரியா கிருமிகள் பெருகுவது தடுக்கப்படும். "உணவுத் துணுக்குகள் பற் களில் சிக்குண்டு, அழுகி நாற்ற மடிக்காமல் இருக்கவும் வாயில் அமிலம் சுரப்பதைத் தடுக்கவும் பல் துலக்குவது முக்கியம்," என்று பல் மருத்துவர் அனிஷா குப்தா மேலும் கூறுகிறார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஒரு மாணவிக்கு பல் பரிசோதனை செய்யும் பல் மருத்துவர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!