பொருளியல் குழு கவனம் செலுத்தும் 5 அம்சங்கள்

சிங்கப்பூரின் வருங்கால பொருளியல் மேம்பாட்டை வழிநடத்திச் செல்வதற்கான ஐந்து துணைக் குழுக்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அண்மையில் முப்பது உறுப்பினர்களைக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வருங்கால பொருளியலுக்கான குழு தனது முதல் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த துணைக்குழுக்களை அறிவித்தது. ஐந்து வெவ்வேறு அம்சங்களில் அந்த ஐந்து குழுக்களும் கவனம் செலுத்திச் செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பர். குழுவின் இணைத் தலைவர்களாக அமைச்சர் ஒருவரும் வருங்கால பொருளியலுக்கான குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் துறையைச் சேர்ந்தவரும் இருப்பர்.

வருங்கால நிறுவனத் திறன்கள், புத்தாக்கம் என்னும் துணைக் குழுவின் இணைத் தலைவர்களாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத் தலைவர் டியோ சியோங் செங்கும் இருப்பர். நிறுவனங்களிலும் தொழிற்கூடங்களிலும் புதிய வர்த்தகப் பங்காளிகளின் மூலம் மதிப்புத்திறன்களை உருவாக்குவதற்கான உத்திகளை இக்குழு பரிந்துரைக்கும். வர்த்தக, தொழில் (தொழில்) அமைச்சர் எஸ். ஈஸ்வரன், கே8 குளோபல் நிறுவ னத்தின் தலைவர் ஜீன்=லக் புட்டேல் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட எதிர்கால வளர்ச்சி தொழிற் கூடங்கள், சந்தைகள் ஆகியவற்றுக்கான துணைக் குழு எதிர்கால வளர்ச்சி காண் பதற்கான சந்தைகளையும் முன்னுரிமை அம்சங்களையும் அடையாளம் காட்டும். படம்: பிசினஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!