டான் டோக் செங் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு, மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றத்துடன் இணைந்து வருடாந்திர புற்றுநோய் கருத்தரங்கை நடத்தவுள்ளது. தனி நபர்கள் தங்களது உடல் நலத்தின் மீது தனி அக்கறை செலுத்தவும் புற்றுநோய் தொடர் பிலான நிலைமைகளைப் புரிந்து கொள்ளவும், வருமுன் காத்துக் கொள்ளும் வகையில் தடுப்பு சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளவும் கருத்தரங்கு உதவும். புற்றுநோய் அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங் கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
"சிங்கப்பூரில் பொதுவான புற்றுநோய்கள்: ஒவ்வொரு வரும் தெரிந்திருக்க வேண்டியது என்ன?" என்பது குறித்த கருத் தரங்கு, தோ பாயோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக அரங்கத்தில் வரும் 19ஆம் தேதி சனிக் கிழமை காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. தனி நபர் கட்டணம் $5. சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் விவரங்கள்/பதிவுக்கு அழைக்க வும்: 9177 7256.