தேர்தல் களம் காணும் சசிகலா: தஞ்சையில் களமிறங்க வாய்ப்பு

சென்னை: அதிமுகவின் செல்வாக்குமிக்க முக்கிய புள்ளியாகக் கருதப்படும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள் ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலை யில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட் டுள்ளன. அதிமுகவைப் பொறுத்த வரை வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா முன் கூட்டியே முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது தோழி சசிகலா இந்தத் தேர்தலில் களமிறக்கப்படுவாரா? என்பதே அதிமுகவினர் இடையே முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

அவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலை யில் அவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2001 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக இத்தொகுதி அதிமுக வசம் உள்ளது. நடப்பு வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் இங்கு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, இத்தொகுதியில் போட்டியிடுவது தமக்குப் பாது காப்பாக இருக்கும் என சசிகலா கருதுவதாகத் தெரிகிறது. அதே சமயம் அவர் தஞ்சை, பட்டுக் கோட்டை, மன்னார்குடி ஆகிய தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி வருவதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே சசிகலா தேர்த லில் போட்டியிடுவார் என்பது வெறும் வதந்திதான் என்றும் அதிமுகவில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். "முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரப் பயணத்தில் சசிகலாவும் உடன் செல்வார். எனவே அவர் தேர்தலில் போட்டி யிட வாய்ப்பே இல்லை," என்று அத்தரப்பினர் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!