ஸ்டாலின்: மக்கள் எரிமலையாக குமுறிக்கொண்டிருக்கிறார்கள்

சென்னை: அதிமுக ஆட்சியின் அவலங்களைக் கண்டு தமிழக மக்கள் எரிமலைபோல் குமுறிக் கொண்டிருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டதாக தமது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். "சட்டப்பேரவையில் வெளியிடப்படும் அறிவிப்புகளின் புனிதத்தன்மையைக் கெடுத்து அரசு பெயரில் வரும் அறிவிப்புகளையே கேலிக் கூத்தாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிர்வாக சீர்கேடுகளை எல்லாம் மக்கள் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

"சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கைபேசி, மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, சீருடை பணியாளருக்கு சொந்த வீடு என்று அனைத்து அறிவிப்புகளையும் அரை மணி நேர முதல்வராகச் செயல்படுவதைப் போன்று அரைகுறையாக, கண்துடைப்புக்காக நிறைவேற்றும் புதிய கலாசாரத்தை புகுத்தி யுள்ளார் ஜெயலலிதா," என்று ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!