உயர்­மா­டி­யி­லி­ருந்து குப்பை வீசிய சம்ப­வங்கள் அதி­க­ரிப்பு

கடந்த ஆண்டில் உயர்­மாடியில் இருந்து குப்பை வீசிய 2,800 புகார்­கள் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தில் பதிவு செய்யப்பட்­ட­தாக சுற்­றுப்­புற, நீர்வள அமைச்­சுக்­கான மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார். 2014ல் பதிவு செய்­யப்­பட்ட 2,500 குற்­றங்களை­விட இது அதிகம். 2013ல் 1,600 புகார்­கள் பதி­வா­கின. கடந்த ஆண்டில் மேலி­ருந்து குப்பை வீசப்­பட்ட சம்ப­வங்க­ளால் எவரும் உயி­ரி­ழக்­க­வில்லை. எனினும் சிலர் காய­மடைந்துள்­ள­னர். அதன்­தொ­டர்­பில் இருவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதன் தொடர்­பாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு கான் தியாம் போவின் கேள்­விக்கு பதில் அளித்த டாக்டர் கோ, இத்­தகைய புகார்­கள் பதி­வா­கும் சம­யங்களில், சுற்­றுப்­புற நீர்வள அமைச்சு, நகர மன்றங்கள் அடித்­தள அமைப்­பு­களு­டன் இணைந்து மேலி­ருந்து குப்பை வீசு­வதற்கு எதிராக குடி­யி­ருப்பாளர்­களை எச்­ச­ரிக்கும். பெரும்பா­லான சம்ப­வங்களில் அதனை தொடர்ந்து நிலைமை மேம்பட்டு உள்­ளதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!