பிடாடாரி வீடுகளுக்கு வரவேற்பு

புதிய குடியிருப்புப் பேட்டையான பிடாடாரியில் அமையும் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளுக்குப் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. அவ்வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினமே கடைசி நாள். இந்த நிலையில், அங்கு அமையும் 236 ஐந்தறை, பல தலைமுறை வீடுகளை வாங்க விரும்பி 3,000த்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதிலும், இரண்டாம் முறையாக வீடு வாங்குவோர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் ஒரு வீட்டிற்கு 91 பேர் என்ற வகையில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இப்படி, அங்கு வீடு வாங்க அதிகமானோர் போட்டியிட அந்த வீடுகளின் அதிக விலையும் ஒரு காரணம் என்பது சொத்துச் சந்தை நிபுணர்களின் கருத்து. அதேபோல, செங்காங் ஆங்கர்வேல் பிளேன்ஸ் குடியிருப்பில் ஐந்தறை வீடு வாங்க ஒரு வீட்டிற்கு 6.6 விண்ணப்பங்கள் என்ற வகையில் போட்டி நிலவுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!