தொடக்கப் பள்ளிகளிலும் பாலர் பராமரிப்புத் திட்டம்

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, எளிதில் பாதிப்பிற்கு உள் ளாக வாய்ப்புள்ள பிள்ளைகளுக் கான ஒருங்கிணைந்த பராமரிப்புத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப் படுகிறது. மனிதநேய அமைப்பான லியன் குழுமமும் நல நிறுவனமான கேர் கார்னரும் இணைந்து இரு நிலை யங்களில் நடத்தி வரும் 'பராமரிப்பு வட்டம் (சர்க்கிள் ஆஃப் கேர்)' எனும் அந்த ஒருங்கிணைந்த பராமரிப்புத் திட்டம் இவ்வாண்டு மேலும் ஏழு பாலர் பள்ளிகளிலும் இரு தொடக்கப் பள்ளிகளிலும் அறிமுகம் காணவுள்ளது.

இதற்காக, மை வோர்ல்ட் பாலர் பள்ளி, மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம், சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம், லேக்சைட் தொடக் கப் பள்ளி, கான் எங் செங் தொடக்கப் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக கேர் கார்னரும் லியன் அறநிறு வனமும் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தன. கடந்த 2013ஆம் ஆண்டு இந்த 'பராமரிப்பு வட்டம்' திட்டம் லெங் கீ மற்றும் அட்மிரல்ட்டியில் உள்ள கேர் கார்னர் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் அறி முகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமான தாக இருந்து வருகிறது. இந்தத் திட்டமானது ஆசிரியர்கள், சமு தாய ஊழியர்கள், கல்விப் பணி யாளர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோரைக் கொண்டு குழந்தை களின் பராமரிப்பில் ஒரு முழுமை யான, புதிய, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள்கிறது.

பாலர் பள்ளிக் குழந்தையுடன் விளையாட்டில் ஈடுபடும் சமுதாய ஊழியர். படம்: சர்க்கிள் ஆஃப் கேர், கேர் கார்னர் சிங்கப்பூர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!