“சிங்கப்பூர் சகோதரர்களை சட்டவிரோதமாக தடுத்து வைக்கவில்லை”

ஜார்ஜ் டவுன்: பினாங்கில் இரு சிங்கப்பூர் சகோதரர்கள் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு விற்பனையாளரும் வேலையில் இல்லாத மூன்று நபர்களும் நேற்று வழக்கு விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். சீ கோக் ஃபாங், 37, லோக் கா வோய், 23, இ. பூன் ரோ, 30, கோய் கீன் டியோங், 26 ஆகிய நால்வரும் தங்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை மறுத்துள் ளனர். மாவட்ட நீதிபதி எல். உமா தேவி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் 6,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அனுமதியளித்தார்.

பின்னர் வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதி ஒத்தி வைத் தார். பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 4.00 மணியிலிருந்து பிப்ரவரி 24ஆம் தேதி பிற்பகல் 2.45 மணி வரையில் சிங்கப்பூர் வர்த்தகர் களான கென்னத் இங் சீ ஹாவும் கேப்ரியல் இங் சியா ஹோவும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வாரம் இரு சிங்கப் பூரர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப் பட்ட விவகாரத்தில் நான்கு உள்ளூர்காரர்கள் கைது செய்யப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொண்டதால் கடத்தப் பட்டதாகக் கூறப்படும் விவ காரத்தை பினாங்கு காவல்துறை யினரிடம் சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்தது.

இரு சிங்கப்பூரர்களைக் கடத்தியதாக நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார் இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!