ஹில்லரி, டிரம்ப் முன்னணி

வா‌ஷிங்டன்: அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் இரு கட்சி களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப்போட்டியின் உச்சக்கட்ட மாக செவ்வாய்க்கிழமை அன்று பல மாநிலங்களில் வெற்றிகளைக் குவித்து ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனும் குடியரசுக் கட்சியில் டோனல்ட் டிரம்பும் முன்னணி வகிக்கின்றனர். சூப்பர் செவ்வாய்க்கிழமை அன்று 11 மாநிலங்களில் வாக் கெடுப்பு நடைபெற்றது. கிழக்கில் மசாசூசெட்ஸ் முதல் வடமேற்கில் அலாஸ்கா வரை வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. இதில் ஹில்லரி கிளின்டனும் டொனால்ட் டிரம்ப்பும் பெரும் பாலான மாநிலங்களில் வெற்றி பெற்றனர்.

குடியரசு கட்சியில் திரு டிரம்ப், ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டெட் குருசுக்கு மூன்று இடங்களில் வெற்றி கிடைத்தது. மார்கோ ருபியோ 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே தனது சொந்த மாநிலமான டெக்சாஸில் பேசிய திரு குருஸ், குடியரசுக் கட்சியில் மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகி டிரம்புக்கு எதிராக தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் வெற்றிப் பேரணியில் பேசிய திரு டிரம்ப், வேட்பாளர் போட்டிகள் எல்லாம் முடிந்தபிறகு ஒரே ஒருவரை இலக்காகக் கொள் வேன். அவர் ஹில்லரி கிளிண் டன்," என்றார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளின்டனும் ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக பெர்னி சாண்டர்ஸ் ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!