கலால் வரி உயர்வுக்கு நகை வியாபாரிகள் எதிர்ப்பு

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதுமுள்ள நகை வியாபாரிகள் மூன்று நாள் கடையடைப்புப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர் 'பான்' அட்டை எண் தர வேண்டியது கட்டாயம் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளதையும் வியாபாரிகள் எதிர்க்கின்றனர். இவ்வாரத் தொடக்கத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளி தவிர்த்த தங்கம், வைரம் போன்ற மதிப்புமிக்க உலோகத்திலான நகைகளுக்கான கலால் வரி 1 விழுக்காடு உயர்த்தப்பட்டது.

இந்த வரி உயர்வு நகை வியாபாரத்தைப் பாதிக்கும் என் றும் குறிப்பாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என் றும் இந்திய நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நகைகளின் விலை உயரும் என்றும் அதன் மூலம் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித் தனர். 1% வரி உயர்வினால் பவுனுக்கு 250 ரூபாய் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டி வரும். நாளை வரையிலான கடை யடைப்புப் போராட்டத்துககு இந்திய நகை வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்மேளனத்தில் 300,000 நகை வியாபாரிகள் உறுப்பினர் களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று முதல் கடையடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!