அருண் ஜெட்லி: முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் அமைச்சர்கள் தப்பமுடியாது

திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் அமைச்சர்களாக இருந்தபோது செய்த முறைகேடுகள் தொடர்பாக நியாயப்படி விசாரணை நடக்கும் என்றும் குற்றவாளிகள் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தொ டர்பான ஏர்செல்=மேக்சிஸ் விவகார மாக இருக்கட்டும், முன்னாள் திமுக அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ. ராசா தொடர்பான 2ஜி முறைகேடாக இருக்கட்டும் இவற்றோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது என்ற பொருள்படும்படி அவர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார். இவ்விரு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அனுமதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் இரு அவைகளிலும் நேற்றும் நேற்று முன்தினமும் கூச்சல் போட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர்.

அதனைத் தொடர்ந்து விவா தம் நடத்த நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.ஈ° அதிமுக உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதிலளித்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், "2ஜி ஊழல் வழக்கிலும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி. "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முந்தைய அரசைப்போல தற்போதைய மத்திய அரசு தலையிடவில்லை. இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது. "பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது 5 நாட்களுக்கு முன்பு இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அறி விப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!