விரைவில் திரைகாணும் தனு‌ஷின் ‘கொடி’

'தங்கமகன்' படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது 'கொடி' படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் முதன் முதலாக அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல் பிரமுகராகத் தோன்று கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. பொள்ளாச்சிப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிப்ரவரி மாத மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று தாமதமாக இப்போதுதான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாம்.

தனுஷ் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் முடி வடைந்த நிலையில் பிற நடிகர்கள் நடிக்க இருக்கும் சில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளன. அதனையும் பத்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். 'கொடி' படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக திரிஷா, ஷாமிலி நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படம் விரைவில் திரைகாண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!