41 வயதில் பிரீத்திக்குத் திருமணம்

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'உயிரே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார். சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது எனப் பொழுதைப் போக்கிவந்த பிரீத்தி ஜிந்தா, இப்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான சூசன் கான், சுரில்லி கோயெல் ஆகியோரும் கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையாக முடித்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ஏப்ரலில் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!