காப்பிக் கடை ஊழியருக்குச் சிறை

சக ஊழியர் மீது தோலை அரிக்கும் ரசாயன திரவத்தை ஊற்றிய காப்பிக் கடை ஊழியருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. புளோக் 464, கிராஃபர்ட் லேனில் இருக்கும் தை ஹுவா உணவங்காடி நிலையத்தில் தட்டுக் கழுவுபவராக வேலை பார்த்தார் லிம் இயோ ஹெங், 62, என்ற ஆடவர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள், அங்கு மேசைகளில் இருந்து சாப்பிட்ட தட்டுகளைச் சேகரிக்கும் வேலையைச் செய்து வந்த 65 வயது ஆடவர் மீது சோடாத் தூளும் நீரும் கலந்த கலவையை லிம் ஊற்றியதாகக் கூறப்பட்டது. வேலை செய்யாமல் நண்பர் ஒருவருடன் உணவு, பானம் அருந்திக் கொண்டிருந்ததால் அந்தத் தட்டுச் சேகரிப்பாளருக்குப் பாடம் கற்றுக் கொடுக்க எண்ணி லிம் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்தத் தட்டுச் சேகரிப்பாளரின் முகம், தலை, கழுத்துப் பகுதிகளில் தோல் வெந்துபோனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!